முதன் முறையாக சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட டிடி!
நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி தனது சகோதரி பிரியதர்ஷினியோடு இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக அறியப்பட்டது விஜய் டிவியின் காபி வித் டிடி மூலமாகதான். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை. இந்நிலையில் தன்னுடைய சகோதரியான பிரியதர்ஷினியோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இதுவரை இணையத்தில் வெளியானது இல்லை என்பதால் அந்த புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.