தொடர்புடைய செய்திகள்
- ட்ரண்ட் ஆன விஜய்& ஷோபா சந்திரசேகரின் லேட்டஸ்ட் புகைப்படம்!.. ஆனா அப்பாவ காணோமே!
- அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்..!
- புகையிலை பொருட்களுக்கு தடை: அரசாணை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!
- மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.100 கோடி நஷ்ட ஈடும் தர முடியாது: டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதில்..!
- ட்ரண்ட் ஆன விஜய்& ஷோபா சந்திரசேகரின் லேட்டஸ்ட் புகைப்படம்!.. ஆனா அப்பாவ காணோமே!
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை: தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசியுள்ளார்
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணிகளுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சோமன்னா போட்டியிடும் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தேஜஸ்வி சூரியா, சோமண்ணா இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் சித்தாராமையா தோற்கடிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் சித்தாராமையா போட்டியிடும் தொகுதியில் தான் சோமண்ணா போட்டியிடுகிறார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணாமலையை அறிமுகப்படுத்தி பேசிய தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறியதை அடுத்து கரகோஷம் எழுந்தது.
Edited by Siva
