1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rs bharathi says actress trisha is not prime minister

திரிஷா என்ன பிரதமரா?!.. நாங்க அப்படித்தான் பேசுவோம்!.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி!..

vijay trisha
நேற்று தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசியன் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து மிகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தவெக சார்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உதயநிதியை இன்று காலை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இது திமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உதயநிதியை கொண்டு செல்லும் வேனை பல இடங்களிலும் திமுகவினர் முற்றுகை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ‘ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர முதல்வர் விஜய்க்கு ஜனநாயகம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தண்ணீர் வரவில்லை என யாரோ திரிஷா பெயரை சொன்னார். அது என்ன உலக மக தப்பா?.. தண்ணீர் என்பது குடிப்பதுதானே.. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்..

இதில் என்ன தவறு இருக்கிறது?.. திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.. ஏன் இவ்வளவு அவசரம்?.. திரிஷா என்ன பிரதமரா?.. முதல்வரா?. பல வருடங்களாகவே நாங்கள் இப்படித்தான் பேசி வருகிறோம்’ என அவர் கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...