வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (07:29 IST)

அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்..!

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை மாநில சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நிலையில் அவர் கீழ் பணியாற்றி உள்ள காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கட்சிக்கு தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்க நிலையில் அந்த பணியை அவர் ஆற்ற கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva