திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (13:21 IST)

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்: உத்தேச அட்டவணை வெளியீடு!

teachers
2024 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளின் உத்தேச அட்டவணை பட்டியல் வெளியாகி உள்ளது. 
 
இதன்படி செகண்டரி கிரேட் ஆசிரியர்கள் தேர்வு  அறிவிப்பு ஜனவரி மாதம் வரும் என்றும் ஏப்ரல் மாதம் இடம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1766 காலியிடங்கள் உள்ளன. ’
 
இதனை அடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அசிஸ்டன்ட் புரொபசர் பணிக்கு 4000 காலியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு 200 இடங்கள் காலியாக இருப்பதாகவும் மே மாதம் இதன் அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 மேலும் இந்த அட்டவணையின் முழு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran