ஹர்திக் பாண்ட்யா மீது தேர்வுக்குழுவினர் நம்பிக்கை இழந்து விட்டனர்.. முன்னாள் உறுப்பினர் கருத்து!
இந்திய லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக தடுமாறி வருகிறார். அதனால் அவர் கடந்த சில தொடர்களை தவற விட்டுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மாவும் கோலியும் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டி 20 கிரிக்கெட் தொடருக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஜூன் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையில் அவர்கள் இருவரும் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவே அந்த தொடருக்கு கேப்டனாகவும் செயல்படுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மீது தேர்வுக்குழுவினர் நம்பிக்கை இழந்துவிடட்தாக முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “உலகக் கோப்பை தொடருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேண்டும் என தேர்வுக்குழுவினர் நினைக்கின்றனர். அதனால்தான் ரோஹித் மற்றும் விராட் அணிக்கு திரும்பியுள்ளனர். ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவின் மேல் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.