செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (20:13 IST)

கரூரில் ஆசிரியர் தினத்தில் நடந்த சுவாரஸிய நிகழ்ச்சி..

கரூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கெளரவித்த தனியார் பள்ளி ! ஆசிரியர் தின விழாவில் சுவாரஸ்ய நிகழ்ச்சி – மாணவ, மாணவிகள் மத்தியில் ஆச்சரியம் அளித்த நிகழ்ச்சி

கரூர் அடுத்த வெண்ணைமலை, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான (2015 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் விருது பெற்றவர்) பழநியப்பன் சிறப்புரையாற்றியதோடு, கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பி.சதாசிவம் மற்றும் கிருஷ்ணராயபுரம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஆகிய இருவரையும் கெளரவித்து பாராட்டு நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்வி சான்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர், ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மகிழ்வுற்றனர். மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களை கெளரவித்த தனியார் பள்ளி என்ற வித்தியாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.பழநியப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது., தமிழகத்தினை சார்ந்த இருவர்களுக்கு இன்று மத்திய அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டதாகவும், அதில் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் அவர்களும் விருது வாங்கியுள்ளதற்கும் பாராட்டுகள் தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களது கையால் விருது வழங்கப்படுகிறதற்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

பேட்டி : திரு.வி.பழனியப்பன் – முதல்வர் – சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.