கடைக்குள் இருந்த ரூ. 8 லட்சம் ’ செல்போன்கள் ’ திருட்டு’... பரபரப்பு சம்பவம்

karur
Last Updated: வியாழன், 5 செப்டம்பர் 2019 (19:10 IST)
உலகம் எவ்வளவு முன்னேறினாலும் கூட அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படும் எண்ணமும், திருட்டுத்தனமும் மட்டும் மனிதர்களை விட்டுநீங்கவில்லை என்றே சொல்லலாம். கள்ளக்குறிச்சியில் ஒரு செல்போன் கடையில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போன்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள காந்திசாலையில் ஸ்ரீதர் என்பர்  அதிசயா என்ற பெயரில் மொபைல் ஷாப் வைத்திருக்கிறார். இன்று காலையில் தம் கடையை திறக்க வந்த ஸ்ரீதர் ,கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளிருந்த மொபைல் போன்கள் எல்லாம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினர். அப்போது கடையில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மொபைல்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
 
கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :