திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (11:50 IST)

கை கொடுக்கவா? கட்டி பிடிக்கவா? – வைரலான ஆசிரியையின் வினோத வீடியோ

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மீம்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதில் ஒரு வீடியோ மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் பெண் ஆசிரியர் ஒருவருக்கு எதிரே குழந்தைகள் வரிசையாக நிற்கிறார்கள். ஒரு போர்டில் கை குலுக்குவது, கை தட்டி கொள்வது, கட்டி அனைப்பது மற்றும் நடனமாடுவது போன்ற செயல்களை குறிக்கும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குழந்தைகள் எந்த படத்தை தேர்வு செய்கிறார்களோ அதை அந்த ஆசிரியர் செய்கிறார். ஒரு குழந்தை கட்டி அணைப்பதை குறிக்கும் படத்தை தொட்டால் அந்த ஆசிரியர் கட்டி பிடிக்கிறார்.

இது ஏற்கனவே இணையத்தில் பலமுறை ஷேர் ஆன வீடியோதான் என்றாலும் ஆசிரியர் தினமான இன்று இது மீண்டும் வைரலாகி உள்ளது.