ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (17:53 IST)

நடிகர் விஜய் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் கொள்ளுப்பேத்தியின் ( மகள் செல்வியின் மகள் ) திருமணத்தில் நடிகர் கலந்துகொண்டார். இந்த விஷயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முக்கிய பேசுபொருளாகவும் உள்ளல்து. இந்நிலையில் நடிகர் விஜயை முக, ஸ்டாலின் சந்தித்ததால் எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், கலைஞரின் மகள் செல்வியின் மகளின் திருமணவிழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.அப்போது விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்  திமுக பொருளாளர் துரைமுருகனனை சந்தித்து பேசியதாகவும், இது அரசியல் தொடர்பான பேச்சாகவும் இருக்கலாம் எனவும் ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் இது குறித்து விஜய் தரப்பும், திமுக தரப்பிலும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
 
இந்நிலையில் இன்று சென்னை தி - நகரில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய ஊட்டசத்து மாத விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் , செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அவர் கூறியதாவது : முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராடி இருந்தால் அவர் மீதான மதிப்பு அதிகரித்திருக்கும். 
மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடிகர் விஜய்யை சந்தித்ததால் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
 
முதல்வரின் வெளிநாடு பயணத்தில் மர்மம் உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.