ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:58 IST)

பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்க...ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி அறிவுரை

அரசு ஆசியர்கள் தம் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்  பிறந்த தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு   நல்லாசியர் விருது  வழங்கி இந்திய அரசு கவுரவிக்கிறது.
 
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது சிறப்பாக சேவையாற்றிய 19 ஆசிரியர்களுக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் ஆகியோர் ’நல்லாசிரியர் ‘விருதுவழங்கி கவுரவித்தனர்.
 
இதனையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி : அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.