1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. teacher sankar says about maha vishnu

மகா விஷ்ணு பேசிய்தை எதிர்த்தது ஏன்? ஆசிரியர் சங்கர் பேட்டி..!

மகா விஷ்ணு
மகா விஷ்ணுவின் பேச்சை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கர்
செய்தியாளர்களிடம் பேசியபோது, அவரது பேச்சை எதிர்த்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
அரசுப்பள்ளியில் ஒரு மதம் சார்ந்த ஆன்மீக பிரச்சாரம் நடப்பது தவறு, முற்பிறவி பற்றி பேசியதால் எதிர்த்தேன். முற்பிறவி பற்றி பேச கூடாது என்று நான் கூறியதை ஏற்காததால் வாக்குவாதம் செய்தேன். மகா விஷ்ணு பேசியது அறிவுக்கு ஒவ்வாத செயல் என தெரிவித்தார்.
 
முன்னதாக அசோக் நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவ மாணவிகள் மத்தியில் ஆன்மீக உரையாற்றியது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த பின்னர் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திராவிட மாடலை தனி ஒருவனாக கதறவிட்டிருக்கிறார்.. சமூக ஆர்வலர் ஸ்ரீராம் எக்ஸ் பதிவு..!