புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (14:54 IST)

திராவிட மாடலை தனி ஒருவனாக கதறவிட்டிருக்கிறார்.. சமூக ஆர்வலர் ஸ்ரீராம் எக்ஸ் பதிவு..!

அரசு பள்ளியில் ஆன்மீகம் குறித்து பேசியதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தனி ஒருவனாக திராவிட மாடல் அரசை கலங்கடித்திருக்கிறார் என சமூக ஆர்வலர் மற்றும் பேச்சாளர் ஸ்ரீராம் அய்யங்கார் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசியதற்காக மகாவிஷ்ணு என்பவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மகாவிஷ்ணு மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் இது குறித்து நான்கு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஒரு பக்கம் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு திமுக ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் அவருடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீராம் ஐயங்கார் என்பவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

திராவிட மாடலை தனி ஒருவனாக கதறவிட்டிருக்கிறார், அவர் எந்த ஒரு மதத்தை பற்றியும் பேசவில்லை, பாரதீய கலாச்சாரத்தை ஞானத்தை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்தார்கள் என்று பேசியுள்ளார், பாவம் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான திக மற்றும் திமுகவினருக்கு கசக்கத்தான் செய்யும்

Edited by Mahendran