தொடர்புடைய செய்திகள்
- பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.! ஆளுநர் ஆர்.என் ரவி குற்றச்சாட்டு.!!
- அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா? சுற்றறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம்!
- வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!
- ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்
- பசுமை பள்ளிகளாக மாறும் 26 அரசு பள்ளிகள்: ரூ.5.20 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு
அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு .. விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு..!
சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாவிஷ்ணு என்பவர் சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
யாருடைய அனுமதியில் இதுபோன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது என்றும் காரசாரமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
