வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (07:53 IST)

பதிவு துறையில் தட்கல் முறை அறிமுகம்: தமிழக அரசு திட்டம்

register
சார்பதிவாளர் அலுவலகத்தில் அவசரமாக பாத்திரம் பதிவு செய்பவர்களின் வசதிக்காக தட்கல் முறை ஆரம்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
 சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டுமானால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது தெரிந்ததே 
 
இதற்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட காத்திருக்கும் நிலை ஏற்படலாம் ஆனால் தற்போது தட்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் அவசரமாக பத்திர பதிவு செய்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது
 
இதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்