செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

மகிந்த ராஜபக்சே பதவி விலகலா? இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்!

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் மட்டும் அதிபருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் அதிபர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் இலங்கையில் தற்போது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று திடீரென இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் அவரது முடிவை ராஜபக்ச ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகிவிட்டார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது.
 
பிரதமர் பதவி விலகியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை ஆகும். அத்துடன் அவ்வாறான திட்டமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்