வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:29 IST)

தீபாவளிக்கு 300 கோடி டார்கெட் விதிக்கும் டாஸ்மாக்..

தீபாவளியை முன்னிட்டு ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களிலேயே மது விற்பனை களைகட்டும். இதில் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கொண்டாட்ட நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களில் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி, 80 கோடிக்கும், 26 ஆம் தேதி ரூ.130 கோடிக்கும், தீபாவளி அன்று 27 ஆம் தேதி ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து மதுக்கடைகளுக்கும் டாஸ்மார்க் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை 3 நாட்களில் விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் எதிர்பாராத விதமாக ரூ.600 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.