செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (14:41 IST)

முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் : தெலுங்கானா மாநில கவர்னர் வாழ்த்து டுவீட்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு , இன்று, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதுகுறித்து தெலுக்கானா மாநில கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைந்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி வந்தார்.

அவரது மறைவுக்குப் பின்  பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியை அனைவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்றாலும் அரசியல் நாகரீகத்தைக் காக்காமல் அமைச்சர்கள் கூக்குரல் இட்டுவருவதும், சில விவாதங்களுக்கு வார்த்தைகளால் எதிர்வினை ஆற்றுவது முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இல்லை என்று கருத்தும் பரவுகிறது.
 
அவர் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட அரசியல் வாரிசு இல்லாமல் ஒரு சாமானியன் முதல்வராக பதவியேற்றதில் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய ஆச்சர்யம் இருந்திருக்கவே செய்யும். 
 
அதுதுதான், சில விமர்சங்கள் மற்றும் பசுமை வழிச்சாலை எதிர்ப்புகள்,  சுபஸ்ரீயின் மரணத்திற்கு அவரது வீட்டாரிடம் இதுவரை முதல்வர், துணைமுதல்வர் தரப்பிலிருந்து ஒரு ஆறுதல் கூட தெரிவிக்காதது போன்ற சில  வெறுப்புச் செயல்களுக்கு  அப்பாற்பட்டு முதல்வர் பதவியை அலங்கரித்து வரும்  எடப்பாடியின் அரசுக்கு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது போன்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த யூகமானது அதிமுக அரசின் மீதான மக்களுக்கு ஆதராவா இல்லையா என்பது வரும் இடைத்தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். 
 
மேலும், சமீபத்திய மோடி - ஜின் பிங் சந்திப்பின்போது, பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டதும் அதற்கு அரசு மேற்கொண்ட சிரத்தையும்  தெரிந்திருக்கும்.
 
இந்நிலையில், இன்று,தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமிக்கு  டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
 
இதுகுறித்து தெலுக்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

’சவாலான சூழ்நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சாமானியமக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க நல்ல திட்டங்களைத்தீட்டி சிறப்பாக முதல்வர் பணியாற்றும் அண்ணன் மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பதற்கு பாராட்டி நற்பணிதொடரவாழ்த்துகிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.