திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:05 IST)

ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. விறுவிறுப்பில் இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் 110 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காண்ப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  மக்கள் ஆர்வத்துடன் விறுவிறுப்புடனும் வாக்களித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.