ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (16:49 IST)

நடிகர் விஜய் , சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் கூட்டணியா ? எஸ். ஏ. சந்திரசேகர் பேசியது என்ன ?

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ. எஸ் அதிகாரியான சகாயம் மிகவும் நேர்மையாளர் மற்றும் ஊழலுக்கு எதிரானவர் என்ற பெயரெடுத்திருக்கிறார். தான் கூறியபடி வாழ்ந்துவருகிறார். அதனால் மக்கள் மற்றுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர். பெரும்பாலான இளைஞர்களுக்கு அவரே இன்ஸ்பிரேசனாக இருக்கிறார். 
அவரை முன்மாதிரியாக வைத்து ஊழல் செய்ய மாட்டோமென கூறிவருகிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்குமாறும், தேர்தலில் போட்டியிடுமாறும் மாணவர்கள் அவரை வலியுறித்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகார் சகாயம் நடத்தி வரும் 'மக்கள் பாதை அமைப்பு' சார்பில் சென்னை அரூகே உள்ள ஒருபகுதியில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நேர்மையாளர் என்ற விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் நல்ல கண்ணுவிற்கு சகாயம் வழங்கினார்.
 
மேலும், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும்போது, தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும், அப்போதுதான் தமிழகத்தில் மாற்றம் வரும் என கூறினார்.
 
இதுகுறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே நெட்டிசன்கள் பலர், விஜய்யின் 'மக்கள் இயக்கம்' , சகாயம் ஐ ஏ எஸ்-ன்,மக்கள் பாதை அமைப்புடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என கருத்துக் கூறிவருகின்றனர்.