டாஸ்மாக்கில் தீபாவளிக்கு புதுசா 4 பீர்கள் அறிமுகம் - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1ம் தேதி முதல் பாட்டிற்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கறாராக உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு வாங்கும் 10 ரூபாயையும் எம்.ஆர்.பி விலையிலேயே அரசு சேர்த்து விட்டது. மது அருந்துவோர்கள் பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு ரூ10-ஐ பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் சில இடங்களில் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஒரு பக்கம் வருகிற 8ம் தேதி தீபாவளி வரவுள்ள நிலையில் மதுப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. முதல் கட்டமாக பிர்ரா, ஹெய்னெகன், சில்வர், சிம்பா ரோர் மற்றும் லோன் உல்ப் ஆகிய 4 புதிய பீர் ரகங்கள் எலைட் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த புதிய பீர் வகைகள் ரூ.250 ஆரம்ப விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.