1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac collection in yesterday

இன்று ஊரடங்கு.. நேற்றே களைகட்டிய டாஸ்மாக்! – வசூல் எவ்வளவு?

Tamilnadu
இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக்குகளில் நேற்றே கூட்டம் முண்டியடித்த நிலையில் அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைகள், டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று டாஸ்மாக் இருக்காது என்பதால் மது பிரியர்கள் நேற்றே தேவையான மதுவை வாங்க டாஸ்மாக்கில் குவிந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக ரூ.252 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.58.37 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு! – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!