1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (12:21 IST)

அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு! – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு! – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியில் கொரோனா காரணமாக ஏற்கனவே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மேலும் நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்புகள் மோசமடைந்து வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் ஏற்கனவே இருந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் ஊரடங்கு மேலும் 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3 வரை தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.