1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin notification about corona lockdown

இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை – மு.க.ஸ்டாலின்!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா வேகமடைந்து வரும் நிலையில் இன்னொரு ஊரடங்கை மக்களால் தாங்க முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறையாததால் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பிருக்கலாம் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை. எனவே, இடைக்கால அரசு இருக்கும் ஒரு வாரத்தில், கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம்; மூச்சு பயிற்சி செய்யுங்கள் – மன் கீ பாத்தில் மோடி அறிவுறுத்தல்!