தொடர்புடைய செய்திகள்
- பாஜகவால் மிரட்டப்பட்டதாக புகார்..! டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
- அனல் பறக்கும் தேர்தல்.! அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
- ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம்.! காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி..!!
- உடைகிறதா திமுக கோட்டை..? செக் வைத்த தமிழிசை..! அதிர்ச்சியூட்டும் தென்சென்னை கள நிலவரம்..!
- எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: குடிமகன்கள் கலக்கம்..!
தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது என்பதும் இதனால் கெடுபிடி அதிகமாக உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் முன்கூட்டியே குடிமகன்கள் தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
