1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (12:43 IST)

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம்.! காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி..!!

Congress
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
 
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு50% இட ஒதுக்கீடு செய்யபடும் என்றும்  புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்  அரசே செலுத்தும் என்றும் பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 
மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும் என்றும் அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
 
100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி 400 ஆக உயர்த்தப்படும் என்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னி பத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
 
எம் எல் ஏ அல்லது எம்பி கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் முறை  நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய துறை ஆணையம் அமைக்கப்படும் என்றும்  நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகளை தவிர மற்ற வேலைகளை ஈடுபடுவது தடுக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
 
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய சந்தைகள் ஏற்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் என்றும் திருமணம் வாரிசுரிமை தத்தெடுத்தலில் ஆண்கள் பெண்களுக்கிடையில் உள்ள வேறுபாடு களையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மீனவர் சமுதாயத்துக்கு தனி வங்கி மீன் பிடிக்க தனி துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பிலும் மீனவர் சமூகங்கள் கணக்கெடுக்கபட்டு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு கட்டுவதை தடுக்க ஒரே வேலை ஒரே ஊதியம் அமல்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.