தொடர்புடைய செய்திகள்
- ”இந்தி ஒழிக”னு சொல்லமாட்டேன்.. “தமிழ் வாழ்க”னு சொல்வேன்! – கமல்ஹாசன்!
- இதுதான் அதிமுகவை காப்பாற்ற சரியான நேரம்! – சசிகலா!
- கொரோனா விதிமீறல் வழக்குகள் முழுவதும் ரத்து! – தமிழக அரசு உத்தரவு!
- பேருந்துகளில் சிசிடிவி.. ஓட்டுனர், நடத்துனர்களுக்கு புதிய நெறிமுறைகள்!
- திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு வன்கொடுமை! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
காலி மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 டிஸ்கவுண்ட்! – டாஸ்மாக் எடுத்த முடிவு!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை அளித்தால் விலை சலுகை என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மது வாங்கி குடிக்கும் பலர் பாட்டில்களை காட்டு பகுதிகளில் வீசுவதால் வன உயிரினங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.
மதுப்பாட்டில்களை காட்டில் வீசுவதை குறைக்கும் விதமாக நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி காலி மதுப்பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளிலேயே ஒப்படைத்தால் பாட்டிலுக்கு ரூ.10 பணம் வழங்கப்படும் அல்லது வாங்கும் புதிய மதுபாட்டிலில் ரூ.10 சலுகை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காட்டின் சுற்றுசூழல் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
