வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (12:46 IST)

கொரோனா விதிமீறல் வழக்குகள் முழுவதும் ரத்து! – தமிழக அரசு உத்தரவு!

Traffic
தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தது.

அதன்படி மாஸ்க் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாதத், ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றியது என அரசின் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய சென்னை தவிர பிற மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.