வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 மே 2022 (08:49 IST)

”இந்தி ஒழிக”னு சொல்லமாட்டேன்.. “தமிழ் வாழ்க”னு சொல்வேன்! – கமல்ஹாசன்!

”இந்தி ஒழிக”னு சொல்லமாட்டேன்.. “தமிழ் வாழ்க”னு சொல்வேன்! – கமல்ஹாசன்!
நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் இந்தி மொழி, தமிழ் மொழி விவாதம் குறித்து பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமா உலகில் இந்தி தேவையா? இல்லையா? என்பது குறித்து சினிமா பிரபலங்களிடையே பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய கமல்ஹாசன் “இந்தி ஒழிக என சொல்வது என் வேலையல்ல.. ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வேன். அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை” என்று கூறியுள்ளார்.

மேலும் திரையுலகில் தானும், ரஜினிகாந்தும் நண்பர்களாக இருப்பதுபோல, அரசியலுக்கு அப்பாற்பட்டு மு.க.ஸ்டாலினும், தானும் நண்பர்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.