1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tancet exam result today

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

TANCET
முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி உதவிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு நுழைய தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கும் சீட்டா என்றா நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு டான்செட் , சீட்டா ஆகிய தேர்வுகளில் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தேர்வுகளை ஏராளமான மாணவர்கள் எழுதிய நிலையில் இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவுகளை www.tancet.annauniv.edu  என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இ-இன்வாய்ஸ்கள்: மே 1 முதல் அமல் என அறிவிப்பு..!