திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:14 IST)

இந்தியாவில் டிசம்பர் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள்; மத்திய அமைச்சர் உறுதி..!

இந்தியாவில் தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களை அடுத்து வந்தே மெட்ரோ ரயில்கள் இந்தியாவில் இயங்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசிய போது வந்தே பாரத் ரயில்களை போலவே வந்தே மெட்ரோ ரயில்கள் டிசம்பர் மாதம் முதல் ஓடை தொடங்கும் என்றும் இந்த ரயில் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்தார். 
 
100 கிலோமீட்டர் உட்பட்ட நகரங்களுக்கு இடையே துரிதமான கால இடைவெளியில் இந்த ரயில்களை இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை மூலம் ஏற்றுமதி அதிகரித்து வருவதால் பிரத்யேகமாக ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 
 
வந்தே மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கினாள் இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே செல்லும் பயணிகளுக்கு மிகுந்த பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது குற்றமில்லை
 
Edited by Siva