வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 மே 2023 (09:17 IST)

பள்ளி சீருடையில் வந்தாலே இலவச பயணத்துக்கு அனுமதி! – போக்குவரத்து துறை உத்தரவு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அரசு பேருந்து நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை நடைபெற்று வந்தது. கோடை வெயில் தணியாததால் பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜூன் 7ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான பஸ் பாஸ் பள்ளிகள் திறந்த பிறகே வழங்கப்படும் என்றாலும், மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அவர்களை அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள், அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K