வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (17:26 IST)

ராமதாஸ் கோரிக்கை நிராகரிப்பு: திட்டமிட்டபடி ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு..!

கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருப்பதால் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை மாற்ற வேண்டும் என்றும் பத்து நாட்கள் கழித்து கோடை வெயில் தணீந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். 
 
ஆனால் ஜூன் ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி செய்துள்ளார். 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி செய்துள்ளார். 
 
பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran