1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Executives meeting at Karur district AIADMK office

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

vijaybashkar
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு சிறப்பாக ஆட்சி நடத்தியவர் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள், தற்போது கழக பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷன் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளது. துரோகம் செய்தவர்கள் முன்பு எடப்பாடியார் பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு வந்துள்ளார். கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
அடுத்த கட்டுரையில்
கார்கிலில் தந்தை, பூஞ்சில் மகன்: பயங்கரவாதத்துக்கு இரையான ஒரே குடும்பத்து இரு உயிர்கள் - நெகிழ்ச்சி பின்னணி