1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu today full lockdown

ஈ, காக்கை கூட இல்லாத சாலைகள்! – தமிழகத்தின் இன்று முழு ஊரடங்கு!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6ம் தேதி முதலாய் அமலில் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல இந்த மாதம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வெளிநாட்டு விருந்தினர் இல்லை; 24 ஆயிரம் பேருக்கு அனுமதி! – கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினம்!