வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை முதல் 16,709 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு

பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்புபவர்களின் வசதிக்காக நாளை முதல் 16709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
பொங்கல் விடுமுறை கடந்த 14ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தனியார் நிறுவனங்கள் நாளை முதல் பணியை தொடங்க உள்ள காரணத்தினால் நாளை முதல் பொங்கல் விடுமுறைக்காக சென்றவர்கள் சென்னை உள்பட தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் முடிந்து திரும்புபவர்களின் வசதிக்காக நாளை முதல் 16709 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
 
இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று பேருந்துகள் இயங்காது என்றும் நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.