வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (13:04 IST)

வரலாறு காணாத மது விற்பனை! – ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என்பதால் இரு நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் நேற்றே தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது வசூல் 190 கோடிக்கு இணையாக இருந்தது.

இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மதுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில் ஒருநாள் வசூல் ரூ.248 கோடியாக உள்ளது. பண்டிகை நாட்கள் தவிர்த்த டாஸ்மாக் விற்பனை இலக்கில் இது மிகவும் அதிகமாகும். அதிகபட்சமான மதுவிற்பனை மண்டலம் வாரியாக..

மதுரை – 56.45 கோடி
திருச்சி – 55.77 கோடி
சேலம் – 54.60 கோடி
கோவை – 49.78 கோடி
சென்னை – 31.80 கோடி