1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS poster issue trending ADMK meeting

அடுத்த முதல்வர் ஓபிஎஸ்; யார் பாத்த வேலை இது? – போஸ்டரால் பரபரப்பு

ADMK
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் தேனியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. அமைச்சர் ஆளுக்கொரு கருத்து கூறிய நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உரிய காலத்தில் முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என பேசியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேனி போடி பகுதிகளில் அடுத்த தமிழக முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது துணை முதல்வர் தலைமையில் அதிமுகவினர் கூட்டம் நடந்து வருகிறது. இவ்வாறாக போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தேனி பகுதிகளில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ் இல்லத்தில் குழுமிய அமைச்சர்கள்!