1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:00 IST)

வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகர் அஜித்தின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் பொது இடங்களுக்கு வந்த போது வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிக் கவனிக்கப்பட்டன. அதையடுத்து தற்போது அவரின் சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.