வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:22 IST)

கொரோனா பாதுகாப்பு இல்லாமல் பயணிகளைக் கையாளும் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள்… அதிகாரிகள் நோட்டீஸ்!

மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பயணிகளைக் கையாளுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்ட போது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல், மற்ற பிற பாதுகாப்புகள் இல்லாமல் நோயாளிகளைக் கையாளுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் பரிந்துரையில் பேரில் மதுரை சுகாதாரத் துறையினர் ஸபைஸ் ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.