1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu raining chances in 48 hours

தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்..?

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை வரை பெய்யகூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கையில் துப்பாக்கியுடன் மேடையில் தோன்றிய பாஜக பிரமுகர் – அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!