திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:25 IST)

வழக்கமா வாள்தானே குடுப்பீங்க.. இப்ப என்ன துப்பாக்கி? – மதுரையில் பாஜகவினரால் பரபரப்பு!

மதுரையில் நடந்த பாஜக விழா ஒன்றில் இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புறநகர் மாவட்டம் புதிய இளைஞரணி கூட்டம் திருப்பாலையில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மதுரையை சேர்ந்த தேவகிரி சல்கா என்பவர் துப்பாக்கி ஒன்றை மேடையில் பரிசாக அளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவகிரி சல்கா மதுரையில் அரசு அனுமதியுடன் ஏர்கன் தயாரிப்பவர் என்றும், பாதரச குண்டுகளை பயன்படுத்த கூடிய ஏர்கன் வகை துப்பாக்கியையே சல்கா வழங்கியதாகவும் அது நிஜ துப்பாக்கி அல்ல என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற கட்சி விழாக்களில் வாள் வழங்கப்படும். அதற்கு பதிலாக பாஜகவினர் ஏர்கன் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.