பழனி கோவில் நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது..
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூபாய்100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து பதிவு செய்த வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நிலத்தை, வெறும் ரூபாய்100 2 கோடிக்கு தவறாக பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது நடவடிக்கை தப்பிப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நில மோசடியின் வீரியத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் ஏற்கனவே போலி ஆவணங்களைத் தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு அதிகாரியான சார்பதிவாளரே கைது செய்யப்பட்டுள்ளது ஆன்மீக அன்பர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
