எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது! – பேர் சொல்லாமல் தாக்கிய கடம்பூரார்!
எம்ஜிஆர் போல சித்தரித்து படம் போடுபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ “சிலர் மக்கள் தங்களை எம்ஜிஆர் போல பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். எம்ஜிஆர் போல சித்தரித்து படம் போடுவதால் மட்டும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் திருமண நாளையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் விஜய்யை எம்ஜிஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.