1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances today

6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick