1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Last tributes to Bipin Rawat's body on 10th

பிபின் ராவத் உடலுக்கு 10ஆம் தேதி இறுதி அஞ்சலி

Bipin Rawat
இன்று குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும்10 ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனது தெரிவிக்கப்பட்டுளள்ளது.
 
மாநில முதலமைச்சர்கள் இரங்கல்முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர் . அதேபோல் மாநில முதலமைச்சர்கள் பிபின் ராவத் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில முதலமைச்சர், ஆந்திர மாநில முதலமைச்சர், ஹரியானா மாநில முதலமைச்சர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும் 10  ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனவும்,ராவத் வீட்டில்  காலை 11  மணி முதல்  2 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக உடல்கள் வைக்கப்படும் எனவும், டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !