5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், ராணிப்பேட்டை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.