1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:21 IST)

வெளியானது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள்! – மாணவர்கள் ஆர்வம்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் பல்கலைகழகங்கள் தாமதமான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

2020 நவம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாத தேர்வுகளுக்கான ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆர்வமாக ரிசல்ட் பார்த்து வருகின்றனர்.