வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:39 IST)

அந்த வீட்டில் பென்னிகுயிக் வசிக்கவேயில்லை! – பென்னிகுயிக் பேரன் தகவல்!

மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள பகுதியில் பென்னிகுவிக் வசிக்கவில்லை என அவரது பேரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரூ.6 கோடி செலவில் நவீனமாக்கப்பட்ட கலைஞர் நூலகம் அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் பென்னிகுவிக் வாழ்ந்த இடம் என்றும் அதை இடிக்க கூடாது என்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பென்னிகுவிக் வசிக்கவில்லை என அவரது பேரனான ஸ்ட்ரூவர்ட் சாம்சன் லண்டனிலிருந்து இமெயில் மூலமாக தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பென்னிகுவிக் 1911ல் மரணமடைந்த நிலையில் 1915ல்தான் அந்த கட்டிடம் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.