வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:41 IST)

ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் முன்னர் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வெண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” தமிழ்நாட்டில் இதுவரை இல்லத அளவாக நேற்றுதான் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகள் திறக்கும் முன்பாக ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.